உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "பஜனை, ஜெபம் செய்வது தியானத்தின் பிரதிபலிப்பே

"பஜனை, ஜெபம் செய்வது தியானத்தின் பிரதிபலிப்பே

பல்லடம் ;"பஜனை மற்றும் ஜெபம் செய்வது என்பது தியானத்தின் பிரதிபலிப்பே, என, பல்லடத்தில் நடைபெற்ற மார்கழி உற்சவ விழாவில், கருத்து கூறப்பட்டது. சத்யசாய் சேவா சமிதி மற்றும் பல்லடம் ஆன்மிக பேரவை இணைந்து நடத்தும், மார்கழி மாத உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், பஜனை, தவம், தியானம் எனும் தலைப்பில், சாய் பக்தர் சேஷராஜ் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:வேத மந்திரங்களை திரும்ப திரும்ப சொல்வதே ஜெபம் எனப்படும். அதையே பஜனை என்கிறோம். பஜனையை தொடர்ந்து செய்து வருவது, ஜெபம் செய்வதற்கு இணையாகும். மந்திரங்களுக்கென ஒரு அதிர்வுகள் உண்டு. அவற்றை சொல்லும்போது, நம்மை அறியாமல் ஒருவித லயிப்பு ஏற்படும். அதை ஜெபமாக மேற்கொள்ளும்போது ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை.

பஜன், ஜெபம் என்பது தியானத்தின் பிரதிபலிப்பாகும். மனிதர்கள் அனைவரும் தன்னை உணர்ந்து செயல்பட வேண்டும். தன் தலை முடியும் கூட, பிறரை பாதிக்க கூடாது என்பதற்காகவே, வள்ளலார் துணியால் தலைமை மூடியபடி இருந்தார். எந்த செயலையும் காலம் தவறாமல் செய்வதே அறிவு என்று, நம் முன்னோர்கள் கூறியுள்ளனனர். இவ்வாறு சேஷராஜ் பேசினார். முன்னதாக, பல்லடம் சத்யசாய் பஜனை குழுவின் சார்பில், பஜன் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !