உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடம் தேவை

பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடம் தேவை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்லும் வெளியூர் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப் பெருமாள், சிற்பங்கள் நிறைந்த கைலாசநாதர் கோவில்களுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்வர்.இதில் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில பக்தர்கள் வரும் வாகனங்கள், அந்தந்த கோவில் அருகில் நிறுத்தப்படுகின்றன. மேலும், வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வடக்கு மாட வீதியில், செங்கல்பட்டு செல்லும் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வெளி மாநில பக்தர்களின் வாகனங்கள், செங்கழுநீரோடை வீதியின் இரு புறங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். கோவில் திருவிழா காலங்களில் இது போன்று அடிக்கடி கோக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இன்னும் தொடர்கதையாக இருக்கிறது.உலகளந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கார்கள், கோவில் அருகில் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால், இந்த வழியாக செல்லும் பிற வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பக்தர்களின் வாகங்களை நிறுத்த இடம் ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !