உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார்

ஸ்ரீவில்லிபுத்துார் : மார்கழி மாத உற்சவங்கள் மற்றும் தொடர்விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளனர். இம்மாதத்தில் பகல்பத்து, ராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு, எண்ணெய்காப்பு உற்சவங்கள் நடக்கிறது. மேலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கோயில் மாடவீதிகள், ரதவீதிகளில் கடும் வாகனபோக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. இப்பகுதி வீடுகளை மறித்து வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியினர், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மிகுந்த சிரமம் அடைகின்றனர். அந்தளவிற்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தற்போது உள்ளூர் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் என மூன்று பிரிவு போலீசார் பாதுகாப்பில் இருக்கும்நிலையில், தற்போது கூடுதலாக பட்டாலியன் போலீசார் இருபது பேர் கூடுதல் பாதுகாப்பிற்காக நியமிக்கபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !