உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவிலில் 29ல் பொம்மலாட்டம்

கச்சபேஸ்வரர் கோவிலில் 29ல் பொம்மலாட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், டிச., 29 முதல், ஜன., 2 வரை, பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி, காஞ்சிபுரம், காந்தி ரோடு, ஜவுளி வியாபாரிகள் சத்திரதரும பரிபாலன மகமை சங்கம் சார்பில், நடத்தப்படுகிறது.அந்த வகையில், நடப்பு ஆண்டு, பொம்மலாட்ட நிகழ்ச்சி, டிச., 29 முதல், ஜன.2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடைபெறும்.பின், கும்பகோணம் முருகன் சங்கீத பொம்மலாட்ட சபையினரின், பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !