சபரிமலை மண்டல காலம் நிறைவு: மகரவிளக்கு பூஜைக்காக டிச.30ல் திறப்பு
சபரிமலை: மண்டல கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட் டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.30 -மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. கார்த்திகை 1ல் தொடங்கிய சபரிமலை மண்டல காலம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் மாலையில் தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்தது.
இதைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டு தங்க அங்கி வருகை
தினத்தில் வடக்கு வாசலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் காயம் அடைந்தனர்.இந்த
ஆண்டு வடக்கு வாசலில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு 3:00மணிக்கு நடை திறந்த போதும், பக்தர்களின் வரிசை சரங்
குத்தியை கடந்து காணப்பட்டது. எனினும் நேற்று காலை 9:00 மணிக்கு பின் பம்பைக்கு
வரும் வாகனங்களில் எண் ணிக்கை குறைந்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு நெய்அபிஷேகம் நிறுத்தப்பட்டு,மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கின. கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கணபதி ஹோம மண்டபத்தில் கலசம் பூஜித்து அதில் களபத்தை நிறைத்தார். தொடர்ந்து மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, அதை எடுத்து வர கலச பவனி நடந்தது. பின், ஐயப்பனுக்கு களப அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை11:04 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகளுக்கு பின் இரவு 11:00 மணிக்கு ஐயப்பனுக்கு திருநீறு பூசி யோக நிலை ஏற்படுத்தி நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக் காக டிச.30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். டிச.31 அதிகாலை 3:30 மணி முதல் நெய் அபிஷேகம் நடக்கும்.