உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

உடுமலை: வைகுண்ட ஏகாதசியை யொட்டி உடுமலை நவநீதகிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி, உடுமலை நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், இன்று, சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடைபெற்றது . ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசியை பிரசாதம் தயாரிக்கும் பணிகள் நடந்தது. கோவிலில் பூமீநீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு மூவாயிரம் லட்டு பிரசாதம் படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !