பெண்ணாடம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :2838 days ago
பெண்ணாடம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 4:00 மணியளவில் நடைதிறப்பு, 4:30 மணிக்கு மூலவர் வேதவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிேஷகம் நடந்தது. 5:15 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 7:00 மணியளவில் கருட வாகனத்தில் வேதவல்லி தாயார் வேதநாராயண பெருமாள் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மபெருமாள் கோவில், கருங்குழிதோப்பு பள்ளி கொண்ட பெருமாள் கோவில், இறையூர் வரதராஜபெருமாள் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.