திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தன்று அமர்வு தரிசனம் ரத்து
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தன்று, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது,” என, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மேல்மருவத்தூர் மற்றும் சபரிமலைக்கு சென்று வரும் பக்தர்கள், தற்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக வருகதின்றனர். ஜனவரி, 1ல் புத்தாண்டு தினத்தில் பவுர்ணமியும் வருவதால், வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவர். எனவே, பக்தர்கள் அனைவரும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய வசதியாக, புத்தாண்டு தினத்தன்று அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும், ஜனவரி, 2ல் ஆருத்ரா தரிசன விழா, 4ல், உத்தராண புண்ணிய கால விநாயகர் வாஸ்து சாந்தி உற்சவம், 5ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் என, விழாக்கள் தொடர்ந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.