உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ராமேஸ்வரம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராமேஸ்வரம் திருக்கோயிலில் இருந்து பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் தெற்குரதவீதி வழியாக புறப்பாடாகி ராமர் தீர்த்தம் குளத்தில் எழுந்தருளினார்.

பின் பெருமாள், அம்மனுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்ததும்,மகா தீபாராதனை நடந்தது. பின் அங்கிருந்து புறப் பாடாகி திருக்கோயிலில் சேதுமாதவர் சன்னதி முன்பு எழுந்த ருளினர்.

முடிந்ததும் இங்கு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் கதவு திறந்ததும், பெருமாள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !