சத்தியமங்கலம் கொளப்பலூரில் பச்சை நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2842 days ago
சத்தியமங்கலம்: கொளப்பலூரில் பிரசித்தி பெற்ற, பச்சைநாயகி அம்மன் கோவில் தேர்த்திரு விழா, கோலகலமாக நடந்தது.கோபி அருகே, கொளப்பலூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பச்சைநாயகி அம்மன் உள்ளது. இக்கோவில் குண்டம் மற்றும் தேர்திருவிழா, கடந்த, 13ல் தொடங்கியது. காலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், கடந்த, 29ல் மதியம், தேரோட்டம் நடந்தது. ஊர்மக்கள் ஒன்றிணைந்து, ராஜாவீதி மற்றும் தேர்வீதியை சுற்றி வடம் பிடித்து இழுத்தனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இன்று 30ல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, முத்து பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவு பெறுகிறது.