கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3028 days ago
இடைப்பாடி: பூலாம்பட்டி, கைலாசநாதர் கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூலாம்பட்டி, கைலாசநாதர், சிவகாசி சுந்திரி அம்பாள் கோவிலில், பவுர்ணமியான நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கைலாசநாதருக்கும், சிவகாமி சுந்தரி அம்பாளுக்கும் நடந்த, கல்யாண உற்சவத்தில் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.