உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. ஆருத்ரா தரிசன விழா கடந்த, 25ல், நடராஜர் ரக்சா பந்தனம் மற்றும் மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்வத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை காலை, 10:15 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !