உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

மாகாளியம்மன் விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள தொட்டம்பட்டி, மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதற்காக தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். தொட்டம்பட்டி, மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னிமலை பிராட்டியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக மேளதாளம் முழங்க, பசுமாடு, குதிரைகள் முன் செல்ல எடுத்துச் சென்றனர். இரவு பொங்கல் விழா நடந்தது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு குதிரை துலக்குதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு அழைத்தல் நடக்கிறது, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மறுபூஜை, நாளை இரவு, 8:00 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !