பகவதியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :3194 days ago
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவில் திருவிழா நடந்தது. ப.வேலுார், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 5ல் துவங்கியது. அன்றிரவு, 7:00 மணியளவில், நன்செய் இடையாறு ராஜாசாமி கோவிலில் இருந்து, மணிவேல் எடுத்து வருதல் நடந்தது. கடந்த ஆறு முதல், நேற்று முன்தினம் வரை, சுற்றுவட்டாரப்பகுதிகளில், சுவாமி வேல் எடுத்து, ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, பொங்கல் மா விளக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பூப்பந்தல்; இரவு, மஞ்சள் நீராடல், காவிரி ஆற்றுக்கு கரகம் செல்லுதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.