மதுரை துவரிமானில் அழகியசிங்கர் நட்சத்திர விழா
ADDED :2835 days ago
மதுரை, மதுரை துவரிமானில் ஸ்ரீஅகோபில மடத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கரின் நட்சத்திர விழா நாளை (ஜன.,11) நடக்கிறது, என மடத்தின் செயலர் வெங்கட்ராமன், ஆராதகர் சுந்தரவரதன் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: மடத்தின் 40 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் நட்சத்திர விழா நாளை நடக்கிறது. சிறப்பு பூஜை, நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்கலன்று (ஜன.,14) இவரது 95 வது மகாராதனமும் நடைபெறும். இவ்விரு நிகழ்ச்சியில் வேதம், திவ்யபிரபந்தம், தேசிக பிரபந்தம், ஸ்தோத்ர பாடல்கள், ராமாயணம், பகவத் கீதை, க்ரந்த பாராயணம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும், என்றார்.