கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :3022 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, பூஜைகள் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.