ஏகாம்பரநாதர் ராஜ கோபுரம் நுழைவு வாயிலில் வாகனங்கள்
ADDED :2921 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜ கோபுரத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்படும், இரு சக்கர வாகனங்களால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தொண்டை நாட்டு திருமுறை திருத்தலங்கள், 32ல், காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், 18வது திருத்தலம். இக்கோவிலுக்கு தினமும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது, சபரிமலை, மேல்மருவத்துார் சீசன் என்பதால், வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், சன்னதி தெருவில், ராஜ கோபுர நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணியரால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.