உலக நன்மைக்காக மிருத்யங்க ஹோமம்
ADDED :2861 days ago
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், வசந்தநகரில் உள்ள பிருந்தாவனத்தில், உலக நன்மைக்காக, மிருத்யங்க ஹோமம் நடந்தது. பள்ளிபாளையம் அடுத்த வசந்தநகர் பகுதி ஆற்றோரத்தில், மிகவும் பிரசத்தி பெற்ற, பழமை வாய்ந்த ஸ்ரீநாக மாக தீர்த்தர் சுவாமிகள் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. இங்கு, நேற்று காலை உலக நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காவும், மக்கள் நீண்ட நாள் ஆயுளுடனும், நோயின்றி வாழ, மிருத்யங்க ஹோமம் நடந்தது. சிறப்பு மிக்க ஹோமத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.