உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் கூடார வல்லி சிறப்பு பஜனை

கோதண்டராமர் கோவிலில் கூடார வல்லி சிறப்பு பஜனை

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கூடார வல்லியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், ராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கூடார வல்லி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து ராம பஜனை நடந்தது. ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா ராமனுஜம் முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். நடுப்பட்டு புருஷோத்தமன் தலைமையில் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !