உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொ.புதுப்பாளையத்தில் ஹரிகுமார பஜனை விழா

கொ.புதுப்பாளையத்தில் ஹரிகுமார பஜனை விழா

கொடுமுடி: கொடுமுடி, சென்னசமுத்திரம் கிராமம், சாலைப்புதூர் அருகே, கொல்லம்புதுப்பாளையம் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதம் முழுவதும் பஜனை நடக்கும். கடைசி நாளான போகி பண்டிகை அன்று, சமாராதனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். போகிப்பண்டிகை தினமான இன்று, ஸ்ரீ ஹரிகுமார பஜனை, 81வது ஆண்டு விழா நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு ஹரிகுமார சுவாமி பூஜை, 6:00 மணிக்கு பஜனை கோஷ்டி ஊர்வலம்,மதியம், 12:00 மணிக்கு விநாயகர், ஹரி குமார சுவாமி பூஜையும் நடக்கிறது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.இரவு, 8:00 மணிக்கு சாமி அலங்காரம், 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ ஹரிகுமார சுவாமி ஊர்வலம் புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !