திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ கருட சேவை
ADDED :2820 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, காலை கருட சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, ஜன 13ல் துவங்கி, 22 வரை, 10 நாட்கள் நடக்கிறது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும், வீரராகவர் கோவிலில், ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்வம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜன.15ல்)கருட வாகனத்தில் உற்சவர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசை அன்று, சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த நாள். அதையொட்டி, தை பிரம்மோற்சவம் சிறப்பாக கருதப்படுகிறது. 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில், பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.