உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னதமான உத்தராயனம்

உன்னதமான உத்தராயனம்

சூரியன், தனது பாதையில் மகர ராசியில் ‘மகர ரவி’யாகப் பிரவேசிக்கும் காலம் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். உத்தர அயனம் என்றால், ‘வடக்குப்புற வழி’ என்று பொருள். தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களும் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். மங்களகரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்தது. இறப்பதும்கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயன காலத்தில் (பாரதப்போர் நிகழ்ந்தபோது) அம்புப் படுக்கையில் வீழ்ந்த பீஷ்மர், உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர்நீத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !