மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மஹா மண்டபம்
மாமல்லபுரம்;மல்லிகேஸ்வரர் கோவிலில், சன்னதி மஹா மண்டபம் புதிதாக அமைக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின், ஆளவந்தார் அறக்கட்டளையின் கீழ், மல்லிகேஸ்வர் உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் முற்றிலும் சீரழிந்து, நீண்டகாலமாக வழிபாடின்றி இருந்தது. சிவபெருமான் வழிபாடு கருதி, 15 ஆண்டுகளுக்கு முன், பக்தர்கள் நன்கொடையில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மீண்டும் புனரமைத்து, சந்திரசேகர், அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர் உலோக சிலைகள் உருவாக்கி, முதன் முதலாக கொடி மரமும் அமைத்து, ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மூலவர் சன்னதிக்கு மஹா மண்டபம் இல்லாதது கருதி, அதை அமைக்க முடிவெடுத்த பிரதோஷ குழுவினர், நன்கொடையாளர்கள் மூலம் தற்போது அமைக்கின்றனர்.