வழுதூர் விநாயகர் கோயிலில் பொங்கல்
ADDED :2925 days ago
ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில், 50ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. விழாவில், சிறுவர் சிறுமிகளுக்கு 50 மீ.,100 மீ., ஓட்டப்பந்தயம், இளைஞர்களுக்கு 1000 மீ.,ஓட்டம்,செங்கல் இழுக்கும் போட்டிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, அருளொளி விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிேஷக ஆராதனை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழுதுார் அருளொளி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. வழுதுார், தெற்கு காட்டூர், உடைச்சியார்வலசை, மொட்டையன்வலசை உள்ளிட்ட பல கிராம மக்கள் பங்கேற்றனர்.