உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக சக்தியம்மன் கோவிலில் தீமிதி விழா

நாக சக்தியம்மன் கோவிலில் தீமிதி விழா

ஜலகண்டாபுரம்: நாக சக்தியம்மன் திருவிழா, கோலாகலமாக நடந்தது. ஜலகண்டாபுரம், காட்டுவலவில், நாக சக்தியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மேள, தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலம் வந்த ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜையில், மக்கள் திரளானோர், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !