உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 18ல் ஹயக்ரீவர் சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 18ல் ஹயக்ரீவர் சிறப்பு பூஜை

பெருந்துறை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை, நடக்கிறது. பெருந்துறை அடுத்த, எல்லப்பாளையம், கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2மாணவ, மாணவியருக்கு, ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை, வரும், 18ல், மதியம், 3:00 மணி முதல், 5:30 மணி வரை நடக்கிறது. கல்விக் கடவுள் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். அவரை வணங்கினால், கல்வியறிவு பெருகும். எனவே, ஞாபகசக்தி குறைவாக உள்ள மாணவர்கள், தங்களின் நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருளை யாகத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !