உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா

சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா

பு.புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்துள்ள, தொட்டம்பாளையத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பொங்கல் பண்டிகை, நேற்று முன்தினம், பவானி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று மாலை, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சவுடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. பங்களாமேடு, அண்ணாநகர், விக்னேஷ்நகர், வினோபாஜி வீதி, தேவாங்கபுரம் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள், அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !