சேவுகம்பட்டி அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழ சூறை விழா
ADDED :2829 days ago
பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழம் சூறைவிடும் விழா நடந்தது. விவசாயம் செழிக்க வேண்டி தை 3ம் நாளான நேற்று வாழைப்பழ சூறை விடும் விழா நடந்தது. சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் நடந்த இவ்விழாவில் வாழைப்பழ கூடைகளை சுமந்து நுாற்றுக் கணக்கானோர் சென்றனர். கிராம பூஜாரி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பூஜாரி வீட்டிலிருந்து பழக்கூடைகள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குபூஜைகள் நடத்தியபின், வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன. அவற்றை பக்தர்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.