தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றில் முன்னோருக்கு ’பித்ரு’ தர்ப்பணம்
ADDED :2870 days ago
மோகனூர்: தை அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றில், புனித நீராடிய மக்கள், மறைந்த தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோருக்கு பித்ரு தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசையன்று, தீர்த்தக்கரைகளில், முன்னோருக்கு நன்றி செலுத்தும் வகையில், தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான மக்கள், புனித நீராடி, மறைந்த தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோருக்கு பித்ரு தர்ப்பணம் செய்தனர். அதற்காக, காவிரி கரையில், அரிசி, தேங்காய் பழம், மாவு உருண்டை, எள், பழவகைகள் வைத்து, வழிபாடு நடத்தினர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களின் ஆசி கிடைப்பதுடன், சந்ததி வளரும் என்பது ஐதீகம். தொடர்ந்து, வீடுகளில், காகத்துக்கு உணவு, பசுவுக்கு கீரை, பழங்கள் அளித்தனர். மேலும், அன்னம், ஆடைகளை தானம் செய்தனர்.