உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை வளத்தியில் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா கும்பாபிஷேக விழா

அவலூர்பேட்டை வளத்தியில் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா கும்பாபிஷேக விழா

அவலூர்பேட்டை: வளத்தியில் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலை யனூர் தாலுகா வளத்தியில் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 18 ம்தேதி காலையில் விக்னேஸ்வர பூஜையும், மாலையில் கிருஷ்ணர் திருமஞ்சனமும் நடந்தது.

ஜனவரி (19) காலையில் சிறப்பு யாக சாலை பூஜைகளும், 9;30, மணிக்கு கும்பாபிஷேகமும், பகல் 12;00 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபஞ்ச சேவையும் , மாலையில் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், தொழிலதிபர் தர்மலிங்கம், மனம் பில்டர்ஸ் நிர்வாக இயக் குனர் கோவிந்தசாமி, பல்லவன் வங்கி கிளை மேலாளர் ரவிகுலராமன் மற்றும் கிராம மக்கள் திர ளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !