சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2821 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 19ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள், மேள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறவுள்ளன.