உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தீர்த்தக்குட ஊர்வலம்

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தீர்த்தக்குட ஊர்வலம்

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அடுத்த, குப்பம்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 20ல், கிராம சாந்தி, நேற்று, விக்னேஷ்வரன், கோ, லட்சுமி - குபேரன், நவக்கிரக பூஜை நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள், காவிரியில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை, ஏரிக்கரை விநாயகர் கோவிலிலிருந்து, ஊர்வலமாக, சக்தி மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். இன்று, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !