உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அன்னப்பட்சி வாகனம் வழங்கல்

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அன்னப்பட்சி வாகனம் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு, பர்வதராஜ குலத்தினர் சார்பில், அன்னப்பட்சி வாகனம் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபி?ஷ கம், இன்று நடக்கிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள, பத்து கோவில்களில் இருந்து, இந்த கோவிலுக்கு மயில், யானை, குதிரை போன்ற வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில் அங்காளம்மன் கோவிலை நிர்வகித்து வரும் பர்வதராஜ குலத்தினர், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயார் செய்த அன்னப்பட்சி வாகனத்தை, கோவிலுக்கு வழங்குவதற்காக, நேற்று காலை ஊர்வலமாக மேள தாளத்துடன் எடுத்துச் சென்று, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !