திருமணம் கைகூட திங்களன்று வாங்க!
ADDED :2936 days ago
பக்தியே முக்திக்கு வித்தாகும் என்பதை உலகிற்கு உணர்த்த பார்வதி, காவிரியாற்றின் தென்கரையில் தங்கி சிவபூஜையில் ஈடுபட்டாள். சிவ தரிசனம் கிடைக்க காலம் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், மனம் தளராமல் ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.
பார்வதியை சோதிக்க எண்ணிய சிவன், ஜோதி பிழம்பாக காட்சியளித்தார். தீப்பிழம்பாக
வந்தாலும், அதில் சிவன் இருப்பதை அறிந்த அவள், தீயை கைகளால் கட்டித் தழுவினாள். சிவன் மனம் குளிர்ந்து அம்பிகையை ஏற்று, சத்திமுற்றம் என்னும் இத்தலத்தில “சிவக்கொழுந்தீசர்” என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார்.
மணமாகாதவர்கள் திங்களன்று தரிசித்தால் திருமணம் கைகூடும். அமாவாசை,
பவுர்ணமி நாட்களிலும் இங்கு தரிசிப்பது சிறப்பு. கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ.,
தொடர்புக்கு: 04374 – 267 237, 94436 78575, 94435 64221