நல்ல வாழ்க்கை துணை வேண்டுமா?
ADDED :2940 days ago
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் நாக சுப்பிர மணியராக முருகன் வீற்றிருக்கிறார். இவருக்கு ஞாயிறு, வெள்ளியன்று ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும். நாக சுப்பிரமணியருக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடித்த நிலையில் காட்சி தருகின்றனர். ‘குமர கோட்ட கல்யாண சுந்தரர்’ என இவர் அழைக்கப்படுகிறார். காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் கோயில்களுக்கு நடுவில் குமரக்கோட்டம் உள்ளது. காஞ்சிகாமாட்சி, ஏகாம்பரேஸ்வரரை தரிசித்து விட்டு குமரக்கோட்டத்தை தரிசித்தால் முழுபலன் கிடைக்கும்.
காஞ்சிபுரம் ராஜ வீதியில் கோயில் உள்ளது.
தொடர்புக்கு: 044 – 2722 2049