உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண யோகம் தரும் ஆதிகாமாட்சி

கல்யாண யோகம் தரும் ஆதிகாமாட்சி

தேவர்கள் அசுரர்கள் தொல்லை நீங்க, அம்பிகையை நோக்கி தவமிருந்தனர்.  அவள் காளி வடிவெடுத்து அசுரர்களை அழித்தாள்.  பின் தேவர்களின் விருப்பத்தை ஏற்று, அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளை சாந்தப்படுத்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவளே “ஆதி காமாட்சி” என்று பெயர் பெற்றாள். ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில், சக்திலிங்கம் உள்ளது.  கல்யாண யோகம் உண்டாக, வெள்ளிக்கிழமை ராகு காலமான காலை 10:30  – 12:00 மணிக்குள் தீபமேற்றி வழிபடுகின்றனர்.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறிது தூரத்தில் கோயில்.
தொடர்புக்கு: 044 –  2722 2609


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !