உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து

அருணாசலேஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும், 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அமர்வு தரிசனம் இல்லை. இது குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:குடியரசு தினத்தன்று அரசு விடுமுறை என்பதாலும், அதை தொடர்ந்து வரும், 27, 28, ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதலாக பக்தர்கள் வருவர். எனவே, அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசனம் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !