உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனத்திருப்பதி கோயில் நடை திறப்பில் மாற்றம்!

வனத்திருப்பதி கோயில் நடை திறப்பில் மாற்றம்!

குரும்பூர்:குரும்பூர் அருகே உள்ள புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் மற்றும் ஆதிநாராயணர் சிவனணைந்த பெருமாள் கோயில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தினசரி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.தற்போது மார்கழி மாதம் ஐயப்பன் கோயில் மற்றும் இதர கோயிலுக்கு மாலை போட்டிருக்கும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் தினசரி அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.இந்த தகவலை கோயில் மேலாளர் வசந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !