உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி கோவில் மஹா கும்பாபிேஷகம்

ஐயப்ப சுவாமி கோவில் மஹா கும்பாபிேஷகம்

கோவை: இடையர்பாளையம், ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் விமர்சையாக நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர். கோவை, தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்தி நகரில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் காலை நடந்தது. காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன், திருப்பள்ளி எழுச்சி நடந்தது. நான்காம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தன. சரவணம்பட்டி, கவுமார மடாலய குமரகுரு சுவாமிகள் விமான கலசத்துக்கு திருக்குட நன்னீராட்டு, மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டு செய்து வைத்தார். தொடர்ந்து, பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை, பதின்மங்கல காட்சி, பேரொளி வழிபாடு, பிரசாதம்வழங்கப்பட்டது.சபரி அன்னதான சேவா அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று பகுதிகளை சேர்ந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !