ராமேஸ்வரம் கோயிலில் கமலம் "பெயின்டிங் பணி துவக்கம்!
ADDED :5086 days ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில், நேற்று கமலம் "பெயின்டிங் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம், அனுப்பு மண்டபம் உள்ளிட்ட பகுதி மேற்கூரையில் கமலம் பெயின்டிங் பொலிவிழந்தன. ரூ.27 லட்சத்தில் மீண்டும் கமலம் "பெயின்டிங் பணிகள் நேற்று துவங்கியது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் துவக்கி வைத்தார். கோட்டப் பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் வெங்கட் ராமன், ஸ்பதபதி செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேதமடைந்த பெயின்டிங்குகளை அழிக்கும் பணியில் ஓவியர்கள் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இப்பணி விரைவில் முடிந்து, ஓவியங்கள் பொலிவு பெற உள்ளன.