தென்காசியில் 27ம் தேதி ஐயப்ப மண்டல பூஜை!
ADDED :5037 days ago
தென்காசி:தென்காசியில் வரும் 27ம் தேதி ஐயப்ப மண்டல பூஜை நடக்கிறது. தென்காசியில் நெல்லை மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் 27ம் தேதி ஐயப்ப மண்டல பூஜை நடக்கிறது. தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெரு சைவ வேளாளர் சங்க கட்டடத்தில் நடக்கும் இந்த மண்டல பூஜையில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் 3 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.