உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலானூர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

மயிலானூர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

ஆழ்வார்குறிச்சி:மயிலானூர் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.கடையம் அருகேயுள்ள மயிலானூரில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு நடந்த வருஷாபிஷேக விழாவில் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜைகள் நடத்தி, திருவிளக்கு பூஜையின் மகிமை பற்றி நவசக்தி இந்து அறக்கட்டளையினர் சிறப்புரையாற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை காளிமுத்து, சக்திவேல், சேர்மக்கனி, மாரியப்பன், சுதர்சன், பரமசிவன் மற்றும் நவசக்தி இந்து அறக்கட்டளை நிறுவனர் கந்தன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !