பஞ்சாட்சரம் என்று சிலர் விபூதியைச் சொல்கின்றனர். இதன் பொருள் என்ன?
ADDED :2927 days ago
பஞ்சாட்சரம் என்பது சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரம். திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகத்தில் மந்திரமாவது நீறு என்று இதன் பெருமையைப் பாடியிருக்கிறார். திருநீறே ஐந்தெழுத்து மந்திரத்தின் ஸ்துõல(கண்ணுக்குத் தெரியும்) வடிவம் என்று கூறுவர். வாரியார் சுருளிமலைக்குச் சென்றபோது கிராமத்துப்பெண் ஒருத்தி அவரிடம், சாமீ! பஞ்சாட்சரம் தாங்க! என்று கேட்க, அவர் திருநீறு கொடுத்தார்.