உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் தெப்போற்சவம் சந்திரகிரகணத்தால் மாற்றம்

திருப்போரூர் தெப்போற்சவம் சந்திரகிரகணத்தால் மாற்றம்

திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவில் தைப்பூச தெப்பத் திருவிழா, சந்திர கிரகணத்தையொட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கெண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 31ம் தேதி நடைபெற இருந்தது. அந்த நாளில், மாலையில், சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இதையொட்டி அன்று பகல், 2:30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படும்; தெப்போற்சவம் மறுநாள், பிப்.,1ம் தேதி மாலை நடைபெறும் என்றும் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !