உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச விழா

செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச விழா

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், 46ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நாளை (31ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்கினி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !