அய்யப்பனின் தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து புறப்பாடு!
ADDED :5035 days ago
சபரிமலை:சபரிமலையில் வரும் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக அ#யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி, கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரன்முளாவில் இருந்து பவனியாக புறப்பட்டது. சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. இதன் நிறைவாக வரும் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இந்த நாளில் அ#யப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கியை, மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக் கையாக வழங்கினார். 426 Œவரன் எடை கொண்ட இந்த தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு வரும் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக நேற்று அதிகாலை தங்க அங்கி பவனி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த பவனி 26ம் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.