உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் தைப்பூச விழா: மனம் உருகிய பக்தர்கள் பரவசம்

மருதமலையில் தைப்பூச விழா: மனம் உருகிய பக்தர்கள் பரவசம்

கோவை: முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மனம் உருகிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவை : முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. தை மாத பூசம் நட்சத்திரத்தில், வள்ளி தேவியை, சுப்ரமணியசுவாமி மணம் புரிந்தார். இந்நிகழ்வை தைப்பூசத் திருவிழாவாக ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விழா நாட்களில் அன்றாடம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று(ஜன., 31ல்) தைப்பூசத் விழாவை முன்னிட்டு, கோவில் மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பி, மனம் உருகிய சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !