உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு

சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு

மதுரை: சந்திர கிரகணத்தை முன்னட்டு பழநி முருகன் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்தாண்டு தைப்பூச தினமான இன்று(ஜன.31ல்) சந்திர கிரகணம் மாலை, 6:22 முதல் இரவு, 8:41 வரை நிகழ்கிறது. இதனால் மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம், 2:45 மணிக்கு துவங்கி, 3:45 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது, சந்திர கிரகணம் உண்டாகிறது. அவ்வகையில், இன்று மாலை, 5:16க்கு சந்திர கிரணம் துவங்கி, மத்திய காலத்தை இரவு, 6:58க்கு கடந்து, இரவு, 8:40 மணிக்கு முடிகிறது. இதனால் கோவில் நடை சாத்தப்படுகிறது. சந்திரகிரகணத்தையொட்டி உடுமலை மாரியம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் மற்றும் கோவை கோனியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்ததும், கோவில்கள் தண்ணீரால் துய்மைப்படுத்தப்பட்டு, தர்ப்பை புல், புனிதநீர் ஊற்றி, பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பிறகே, நடை திறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !