உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் 2 முருகப்பெருமான் புறப்பாடு

திருப்பரங்குன்றத்தில் 2 முருகப்பெருமான் புறப்பாடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை மற்றும்முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். பழனியாண்டவர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மூலவர் பழனியாண்டவருக்குபால் உட்பட பல்வகை அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழாக்களில் சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். இரண்டு சுவாமிகள் புறப்பாடாவது தைப்பூசத்தன்று மட்டுமே. பக்தர்கள் பால், பன்னீர், இளநீர், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலும் தைப்பூச திருவிழாவும், அன்னதானமும் நடந்தது. சந்திரகிரஹணத்தை முன்னிட்டு குன்றத்து கோயில்களில் காலையிலேயே பூஜையும், சுவாமி புறப்பாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !