திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்க ரதம் பராமரிப்பு
ADDED :2821 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கரதம் பராமரிப்பு பணி பிப்.,12ல் துவங்குகிறது. கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதம் உலா வந்தது. கோயில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி ரதம் வலம் வரும். அதில் உள்ள பொம்மைகள் சேதமடைந்தன. துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி கூறுகையில், உபயதாரர் மூலம் பணிகள் துவங்குகின்றன. நான்கு நாட்களுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும், என்றார்.